தலைமைக்கு கட்டுப்படுவோம் – மதுக்கூர் தமுமுக, மமக கூட்டத்தில் முடிவு

image

தஞ்சாவூர் மாவட்டம் (தெற்கு) மதுக்கூர் பேரூர் கழக ஆலோசனைக்கூட்டம் பேரூர் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மதுக்கூர் அமீரக பொறுப்பாளர்களில் ஒருவரும்,முன்னாள் மதுக்கூர் நகர பொறுப்பாளருமான E.S.M.பைசல் அவர்கள் தலைமையில் நகர செயலாளர் ஃபவாஸ்,பொருளாளர் இலியாஸ்,மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லா,மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் கவுன்சிலர் கபார்,ஆகியோர் முன்னிலையில்.இறைவசனத்துடன் இனிதே ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சகோதரர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்து சென்றார்.
மதுக்கூர் தமுமுக மற்றும் மமக அனைவரின் ஒட்டுமொத்த ஆலோசனையின்படி சமுதாய நலன் கருதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் ஒரே தலைமையில் கீழ் செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
மதுக்கூரில் மாட்டுக்கறிவை உண்ணும் போராட்டம் நடத்துவது எனவும்,வருகின்ற 18/10/2015 இஸ்லாமியப்பிரச்சாரப்பேரவை சார்பாக பயான் நிகழ்ச்சி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.ஆலோசனைக்கூட்டத்தில் மதுக்கூர் கிளையின் மூத்த சகோதரர் எஸ்.சிராஜ் அவர்கள் உட்பட அனைத்து நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close