அதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்!!!

image

அதிரையில் நடைபெறும் அனைத்து திருமணங்களில் காலை அல்லது இரவு நேர விருந்தில் இடியாப்பம், பரோட்டா, ரவ்வா, இறைச்சி ஆனம், கடப்பாசி போன்றவைகள் தவறாமல் இருக்கும். இவை அனைத்தையும் படிக்கும் போதே அதை உண்ண ஆவலாக இருக்கும்.

அனால், இதில் பரோட்டா தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதிரையர்களையும் பரோட்டாவையும் பிரிக்க முடியாத அளவுக்கு நம்ம ஊர் வாசிகள் பரோட்டா பிரியர்கள். இதனை அடுக்கு ரொட்டி என்றும் அழைப்பார்கள்.
நாம் நாள் தோறும் சமுக வலைத்தளங்களில் பரோட்டா, மைதாவின் கெடுதிகள் பற்றி படித்துக்கொண்டும் பகிர்ந்துக் கொண்டும் தான் இருக்கிறோம். ஆனால் இதனை நிஜவாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது நமக்கு மிகவும் சிரமமாக உள்ளது.

நம் வீட்டில் இந்த ஒழுங்கு முறையினை கடைபிடித்தாலும் திருமண விருந்து என்று செல்லும் போது பரோட்டாவை உண்ணக்கூடிய நிலை ஏற்படுகிறது.

நமதூர் பெண்களும் இரவு நேர சமையல் செய்ய முடியவில்லை என்றால் கடையில் பரோட்டாவை வாங்கி வர சொல்லிவிடுகின்றனர்.

இதில் நமதூரில் திருமண விருந்துகளில் முதல் கட்டமாக பரோட்டாவை தவிர்த்துவிட்ட அதற்க்கு மாற்றாக சப்பாத்தி அல்லது வேறு ஏதாவது உணவினை சேர்க்கலாமே!!!

திருமண நிகழ்ச்சிகளில் இதனை தவிர்க்கும் போது நாளடைவில் அனைவர் மத்தியிலும் பரோட்டாவின் தீங்குகள் குறித்து அதிகம் தெரிய வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.

விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் அளிக்கலாம்!!!

-நூருல் இப்னு ஜஹபர் அலி (ஆசிரியர் -அதிரை பிறை)

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close