மும்பையில் தன்னுடைய மிகப்பெரிய கடையை தொழுகைக்காக அர்ப்பணித்த இந்து மத சகோதரர்

மும்பையின் வணிக பரபரப்பு நிறைந்த நெருக்கடியான ‘முகுந்த் நகரில்’ உள்ள பழங்காலத்து பள்ளிவாசலை புதுப்பிக்கவேண்டிய நிர்பந்தம் காரணமாக தொழுவதற்கு இடமில்லாமல் தவித்தனர், முஸ்லிம்கள்.

image

முஸ்லிம்களின் நிலமையை உணர்ந்த, பள்ளிவாசலுக்கு நேரெதிரில் ‘ஜாஸ் லெதெர்ஸ்’ என்ற கடையின் உரிமையாளர் ‘கலே’ என்பவர், தான் புதிதாக திறக்க தயாரான நிலையில் வைத்திருந்த கட்டிடத்தை தொழுகைக்காக அர்ப்பனித்துள்ளார்.

2500 சதுரடிகள் கொண்ட தரை தளத்தில் அமைந்துள்ள அவ்விடத்தின் மாத வாடகை மதிப்பு ரூ. ஒரு லட்சமாகும்.

வாடகை குறித்து முஸ்லிம்கள் தரப்பில் கேட்டபோது எதனையும் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார், கலே.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாடகை இல்லாமல் கொடுக்கப்பட்டுள்ள அக்கடிடத்தில், தொழுகையாளிகளுக்கு வேண்டிய தண்ணீர் வசதி, மின்சாரம், உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் சொந்த செலவில் செய்து கொடுத்துள்ளார், கலே.

முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசலின் கட்டுமானப்பணிகள் முடிய இன்னும் சில மாதங்களாகும் என்ற நிலையில், கலே அவர்கள், கடையை ஒப்படைக்க எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை என்பதோடு, கடையின் அனைத்து பகுதியையும் பள்ளிவாசல் நிர்வாகிகளின் முழு கட்டுப்பாட்டில் ஒப்படைத்து வைத்துள்ளார்.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close