அதிரை “ஆட்டை கழுதை ஆக்கிய ஊரா??”பெயர் வந்தது எப்படி?? ஓர் நகைச்சுவை வரலாறு

image

நாம் வெளியூர்களில் சென்று வெளியூர் வாசிகளிடம் அதிராம்பட்டினம் என்று சொன்னால் அட!! அது ஆட்டை கழுதை ஆக்கிய் ஊராச்சே!!! என்று கூறுவார்கள். இதற்கான காரணம் நம்ம ஊர் காரர்களுக்கும் அதிகம் தெரிய வாய்ப்பு இல்லை.

இது குறித்த விளக்கத்தை நாளிதல் ஒன்றில் அதிரை ஜோக்ஸ் மன்னன் புஹாரி அவர்கள் எழுதியுள்ளார். இதில் அவர் கூறும் போது, “சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக பஸ் போக்குவரத்து இல்லாத காலகட்டம் அது. அப்போது பட்டுக்கோட்டையில் கூடும் வாரச்சந்தைக்கு ஆடு மாடுகளை விற்க ராஜாமடத்துக்காரர் (ஆர்.வெங்கட்ராமன் பிறந்த ஊர்) எங்கள் ஊர் வழியாக செல்வது வழக்கம்.

எதற்கு எடுத்தாலும் எடக்கு மடக்காக பேசும் இவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று ஊரில் உள்ள சிலர் திட்டமிட்டனர். ஒரு திங்கள்கிழமை வழக்கம்போல் ஒரு ஆட்டுக்குட்டியை ஓட்டிக்கொண்டு சென்றவரிடம் ஒரு நபர், ” என்ன அண்ணே… கழுதையை கூட்டிக் கிட்டு போறிங்க?” என்றிருக்கிறார். அதற்கு அவர்…”நீதாண்டா கழுதை” என்று சொல்லி விட்டு நடந்திருக்கிறார். சற்று தூரம் தள்ளி ஒருவர் நின்று கொண்டு “என்ன அண்ணே… சந்தையில் கழுதைகூட விக்கிறாங்களா?” என்றிருக்கிறார். அதன் பிறகு இன்னொருவர், “என்னடா இது… ஒரு கழுதை இன்னொரு கழுதையை கூட்டிக்கிட்டுப் போகுது?” என்ற கிண்டலடிக்க ஆத்திரம் தாங்காத இவர், தான் கொண்டு வந்த ஆட்டை அப்படியே விட்டுவிட்டு அவரை அடிக்க ஓடியிருக்கிறார். கொஞ்ச நேரம் சென்றபின் திருப்பி வந்து பார்த்தபோது அவர் கொண்டு வந்த ஆட்டை யாரோ ஒருவன் ஆட்டையப் போட, அந்த இடத்தில் ஒரு கழுதை நின்று கொண்டு இருந்ததாம்.

மேலும் கோபமான அவர், “இந்த அதிராம்பட்டினத்துக்காரனுங்க நான் கொண்டு வந்த ஆட்டை கழுதை ஆக்கிட்டானுங்க. இவனுக்க நல்லா இருப்பானுங்களா?” என்று சபித்தபடியே சென்றிருக்கிறார். இதுதான்.

அதிராம்பட்டினம் ஆட்டை கழுதையாக்கிய ஊர் என்பதற்கான அடிப்படைக் காரணம்.

-அதிரை புஹாரி

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close