ஆற்றல் மிக்க ஆசான், அலியார் சார்!

எனக்குப் பள்ளியிறுதி வகுப்பில் ஆங்கிலமும், வரலாறும் கற்பித்த ஆற்றல் மிக்க ஆசான் அலியார் சார் அவர்களின் இறப்புச் செய்தி கேட்டு யான் யாத்துள்ள லிமரைக்கூ

 

 

aliyar sir

 

 

பள்ளியிறுதி வகுப்பின் ஆசான்
பயணமாகி விட்டார்கள் இவ்வுலகை விட்டும்
படித்தவை யாவும் பேசும்

பெயரும் வீரமும் அலியார்
பெருமுயற்சி செய்தெங்கள் மூளைக்குள்
வரலாற்றைச் செலுத்திய வலியார்

இலக்கணப் பிழையிலா ஆங்கிலம்
கற்பித்த காரணீயம் நாங்களும் கற்பிக்கும்
ஆற்றலை இவரிடம் வாங்கினோம்

இவரைக் கண்டால் பயமே
இதயத்தில் என்றென்றும் இருந்தாலும்
எல்லார்க்கும் உரைப்பது நயமே

விதைத்த விதைகள் நாங்கள்
விருட்சமாய்ப் பாரெங்கும் கல்வியின் காற்றாய்
வீச வைத்தது நீங்கள்

இறையவன் உரிமை கொண்டு
இம்மையை விட்டும் அழைத்துக் கொண்டான்;
சான்று கூறும் தொண்டு

-அதிரை கவியருவி கவியன்பன் கலாம், அபுதாபி

Close