கட்டாய மதமாற்ற தடை சட்டம்‬!(அதிரை உபயா அவர்களின் சிறப்பு கட்டுரை)


மனிதர்களை நல்வழி படுத்தவே மதங்கள் உலகில் தோன்றின. இதில் தனக்கான ஒன்றை சரியான வாழ்க்கை நெறியை மனிதன் தேர்தெடுத்துகொள்கிறான் அல்லது அதில் பிறப்பதால் அவ்வழியை தொடர்கிறான். ஏதாவது ஒரு மதத்தில் பிறக்கும் ஒருவன் தான் இருக்கும் மதத்தில் தனக்கு இழிநிலையோ, குழறுபடிகளோ, பகுத்தறிவிற்கு பொருந்தாத தன்மையோ காணும்போது மற்ற மதங்களை நல்ல தன்மைகளை பார்த்தோ ஆராய்ந்தோ அதில் இணைத்துகொள்கிறான்.
எனவே “மதமாற்றம் என்பது வெறும் பெயர் மாற்றம் அல்ல. அது மன மாற்றமும்,, வாழ்க்கையின் மாற்றமும் கூட. இதில் யாரையும் கட்டாயபடுத்தி மதமாற்றம் செய்ய முடியாது அப்படி பயமுறுத்தியோ பணத்தாசை காட்டியோ மதமாற்றம் செய்தாலும் அந்த மதத்தில் அறிவுள்ளவன் நிலைக்கவும் மாட்டான். அந்த மதமும் நிலைக்காது. இதுவே உலக நியதி.”
இந்தியாவை பொருத்தவரை இந்திய குடிமக்கள், தான் விரும்பிய மதத்தை பின்பற்றலாம்,மாறலாம்,பரப்புரையும் செய்யலாம். கட்டாய மதமாற்ற தடை சட்டம் என்பது சிறுபான்மை மக்களின் மீது அநீதி இழைக்கவே பயன்படும். அதனால்தான் இந்த சட்டத்தை கொண்டுவர சங்பரிவார இந்துத்துவாக்கள் பலநாள்களாக முயற்சித்தும் அவர்கள் ஆட்சியில் இல்லாததாலும் நடுநிலையாளர்களின் எதிர்ப்பாலும் அது பலனளிக்கவில்லை. 

அதற்க்காக தக்க தருணம் எதிர் பார்த்தவர்கள், தான் ஆட்சிக்கு வந்ததும் அந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு திட்டமாக விழிம்பு நிலை மனிதர்களை பணம் கொடுத்தும் மசியாதவர்களை மிரட்டியும் மதமாற்றம் செய்தனர். அவர்கள் எதிபார்த்ததுபோல் பலரும் இந்த கட்டாயமதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் தங்களின் எதிர்ப்பவர்கள் வாயாலேயே கட்டாயமதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவரும் திட்டபடி எடுத்துரைக்கின்றனர். 

இந்த சட்டத்தை கொண்டு வர இன்னொரு காரணமும் உண்டு. இந்த மதமாற்றம் இந்திய மக்களை என்றும் அடிமையாக வைத்திருக்க நினைக்கும் ஆதிக்க சாதிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்ததாலேயே இதை முழுமூச்சாக எதிர்கின்றனர். அதனால் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தின் உதவி கொண்டு சிறுபான்மை இனத்தின் மீது தவறான முறையில் பயன்படுத்தவே உதவும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து.
Advertisement
Close