முஹர்ரம் விடுமுறை தேதி மாற்றம்!

image

இந்த ஆண்டுக்கான முஹர்ரம் அரசு விடுமுறையானது அக்டோபர் 23-ம் தேதிக்குப் பதில் 24-ம் தேதி என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அக்டோபர் 23-ம் தேதியை முஹர்ரம் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்திருந்தது. முஹர்ரம் மாதத்தின் முதல் நாளில் பிறைதெரிந்தால் 10-வது நாளில் முஹர்ரம் திருநாள் கடைப்பிடிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல் நாளான அக்டோபர் 13-ம் தேதி பிறை சரியாகத் தெரியவில்லை. மறுநாள் தெரிந்தது. இதனால், 10-ம் நாளான அக்டோபர் 24-ம் தேதியை முஹர்ரம் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தலைமை காஜி வேண்டுகோள் விடுத்தார்.

இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு, அக்டோபர் 23-ம்தேதிக்குப் பதிலாக 24-ம் தேதியை மொகரம் பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close