அதிரை அருகே லாரி பஸ் நேருக்கு நேராக பயங்கர மோதல் (படங்கள் இணைப்பு)

image

முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் பட்டுக்கோட்டையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற ஆயில் டேங்கர் லாரியும் முத்துப்பேட்டையிலிருந்;து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற ஒரு அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இதில் டேங்கர் லாரியும் அரசு பேருந்தும் முன் பகுதி முழுவதும் சேதமாகியது. இந்த விபத்தில் இரண்டு டிரைவர்களும் பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

image

நிருபர் முஹைதீன் பிச்சை

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close