M.B.A பட்டத்தை பா.ஜ.க அமைச்சர் கையில் வாங்க மறுத்த சமீர் என்ற இளைஞர்!

smriti_irani1பாஜக அரசிடமிருந்து பட்டத்தை பெறுவதற்கு MBA தேர்ச்சிபெற்ற மாணவர் சமீர் மறுத்துவிட்டார்.
இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள சமீர்…
நாட்டில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதை கண்டித்து போராடும் 41 எழுத்தாளர்கள் தங்களது விருதினை திருப்பி அனுப்பி உள்ளனர்.
முதுகலை பட்டம், மிகவும் மதிப்புமிக்கது. ஆனாலும், சகிப்புத் தன்மை அற்ற இந்த அரசை எதிர்க்கும் விதமாக 19ம் தேதி (இன்று) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் நாள் நான் பட்டத்தை ஏற்க போவதில்லை என்று தெரிவித்து உள்ளார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார் என்பது குறிப்பிடதக்கது.
கன்னட எழுத்தாளர் கால்புர்கி கொலை, தாத்ரி சம்பவம் மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராக எழுதும் எழுத்தாளர்கள் மிரட்டப் படுதல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும் கூறி எழுத்தாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
சாகித்ய அகாடமி விருது உட்பட பல்வேறு விருது பெற்ற எழுத்தாளர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு கிடைத்த விருதை திருப்பி அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாணவர் சமீரும் தனது பட்டத்தை வாங்க மறுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் பாஜக அரசுக்கு அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Close