Adirai pirai
articles தமிழகம்

உயர்வளிக்கும் உன்னத சேவையில் DRAGBARS!

இன்றைய உலகம் அதீத வளர்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது என்றால் அதில் இளைஞர்களின் பங்கு மிகப் பெரியதாகும். காரணம் எதையும் செய்து முடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் துணிவும் ஒரு இளைஞனிடம் இருப்பது தான்.

அந்த வகையில் நாம் தற்போது பார்க்க போகும் இளைஞர் சென்னையை சேர்ந்தவர்.சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் சுப்ரமணியன் (வயது 25) இவர் CARESOFT GLOBAL என்ற கம்பெனியில் பணி புரிகிறார்.கடந்த 2015 பிப்ரவரி மாதம் இவரால் என்ற DRAGBARS அமைப்பு துவங்கப்பட்டது.இந்த அமைப்பு முதலில் BIKERS CLUB ஆக ஆரம்பிக்கப்பட்டது. நாளடைவில் இது NGO ACTIVITIES காக மாற்றபட்டது.இந்த அமைப்பு தற்போது பல சமூக சேவைகள் செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து கிஷோர் சுப்ரமணியன் அவர்கள் நம்மிடம் கூறியதாவது :

“DRAGBARS என்ற அமைப்பு துவங்கும் போது நான் மட்டும் தான் இருந்தேன். நாளடைவில் இந்த அமைப்பில் சில இளைஞர்கள் இணைந்தார்கள்.இந்த அமைப்பு ஒரு பைக்கர்ஸ் கிளப்-பாக தான் இருந்தது.எங்களுக்குள் ஒரு ஆசை வந்தது நாங்கள் எதாவது நல்லது செய்ய வேண்டும். அப்படியே நாங்கள் இந்த அமைப்பை NGO-வாக மாற்றம் செய்தோம்.

தற்போது சென்னையில் பல பகுதிகளில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி,இரத்ததான விழிப்புணர்வு பேரணி,மரம் வளர்ப்போம் கருவேல மரத்தை அளிப்போம்,MISSION 2020 போன்ற  விழிப்புணர்வு பேரணி நாங்கள் செய்து வருகிறோம்.மேலும் நாங்கள் இது போன்ற கல்லூரி மாணவர்கள் ,பொது சேவை செய்யும் அமைப்புடன் இணைந்து செய்கிறோம்.

தற்போது எங்கள் அமைப்பில் 150-க்கும் மேற்ப்பட்ட நபர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.இறுதியாக ஒன்றை மட்டும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தெரிவித்து கொள்கிறேன்:

தலைக்கவசம் என்பது ஏதோ ஒரு ஆடம்பரத் தேவை இல்லை அது அத்தியாவசியமானது, பாதுகாப்பான பயணத்திற்கு உதவுவது.சாலை விபத்துக்கள் பற்றிய புள்ளி விவரங்களின் படி,” இருசக்கர வாகன விபத்துக்களில் ஏற்படுகின்ற மரணம் ,பெரும்பாலும் தலை காயத்தினால் ஏற்படுகின்றது என்பது தெரிய வருகிறது”.

இவை எல்லாம் தெரிந்திருந்தும் நம்மில் இன்னும் பலர் தலைக்கவசம் அணிவதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார்கள் .எது எவ்வாறாகினும்  ஒன்றை மட்டும் எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியது அவசியம் ஆகும். தலைக்கவசம் அணிந்தால் வியர்வை கொட்டலாம்,உங்கள் சிகை அலங்காரம் கலையலாம் ஆனால் பொன்னான உங்கள் உயிர் பாதுகாக்கப்படும் என்பதை மட்டும் மறவாதீர்கள்.

நிறைவாக வாகனம் ஓட்டிச் செல்லும் உங்களை நம்பி உங்கள் தாயாரோ,மனைவியோ,குழந்தைகளோ  வீட்டில் காத்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.அவர்கள் ஆசையும் எதிர்காலத்தையும் பாழாக்கிவிடாதீர்கள்.இதுவரை தலைக்கவசம் அணியாதவர்களும் இப்போதிருந்து தலைக்கவசம அணியத் துவங்குவீர்கள் என நம்புவோம்” என்றார்.

இன்றைய இளைஞர்கள் திரை நட்சத்திரங்களையும், விளையாட்டு வீரர்களையும் தங்கள் கனவு நாயகர்களாக பாவித்துக்கொண்டு அவர்களுக்கு துதிபாடுவதும், கட் அவுட்கள் வைப்பதும், தங்களின் புகைப்படத்திற்குப்பதில் அவர்களின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு முகம் தொலைத்த மனிதர்களாக இருப்பதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது.

ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டுதான் கதாநாயகன் சினிமாவில் நடிக்கிறான் என்பதையும், விளையாட்டு வீரன் விளையாடுகிறான் என்பதையும் இவர்கள் ஏன் உணரவில்லை..

அவர்கள் நட்சத்திரங்களாக மின்னுவதற்கு நீ துணை போகிறாயே.. உன் வாழ்கையில் நீ மின்னுவது எப்போது..

சிந்தித்துப் பாருங்கள் இளைஞர்களே.. கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக இளமை முடிந்துபோகும்…
ஒன்று உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்க்காகவும் உழையுங்கள் அல்லது சமூகத்திற்காகவாவது உழையுங்கள்..
வரலாற்றுப் பக்கங்களில் உக்களுக்கென ஓர் வரியையாவது எழுதிவிட்டுச் செல்லுங்கள் என்றார்.
இவர்களின் சமூக சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் …!!!
பரிந்துரை :
N.காலித் அஹ்மத்
CBD தஞ்சை மாவட்ட செயலாளர்
தொடர்புக்கு:8056394348 drag 7drag 3drag 8drag 7drag 4