வெள்ளை மாளிகைக்கு ஒபாமாவின் விருந்தாளியாக சென்ற இளம் விஞ்ஞானி அஹமது!

ahmad1✔வெள்ளை மாளிகையில் இளம் விஞ்ஞானி அஹமதுவை கௌரவித்த ஒபாமா….!!

✔அமெரிக்காவில் தமது வீட்டில் சுயமாக வாட்ச் தயாரித்து பள்ளிக்கூடத்திலுள்ள சக நண்பர்களிடமும், ஆசிரியர்களிடமும் காட்டி மகிழ்ச்சியை பெறுவதற்காக சென்ற மாணவன் அஹமதுவை பள்ளி நிர்வாகம் தீவிரவாத கண்ணோட்டத்தோடு பார்த்து காவல்துறையில் புகார் கூறி பள்ளியிலிருந்தே காவல்துறையினரால் விலங்கிட்டு சிறை சென்றான்.

✔உலகமே காரி உமிழ்ந்து அதிபர் ஒபாமாவின் உத்தரவின் பேரில் வெளிவந்த அஹமது சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்களின் விருந்தாளியாக உம்ரா என்னும் புனித பயணத்தை மேற்கொள்ள அஹமது தம்முடைய குடும்பத்தினருடன் சவூதி அரேபியா சென்றான்.

✔உம்ரா கடமையை நிறைவு செய்த அஹமது செய்தியாளர்களிடம் உலகத்திற்கே தாம் இலவச மின்சாரம் வழங்க இருப்பதாகவும் அதுவே தமது லட்சியம் என்றும் அதற்கான முயற்சியிலும் இறங்கி விட்டதாக கூறினான்.

✔இந்நிலையில் சவூதி அரேபியாவிலிருந்து அமெரிக்கா சென்ற அஹமதுவை அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகைக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தார்.

✔ஒபாமா தம்முடைய வழமையான விண்ணியல் இரவு நிகழ்ச்சியில் அஹமதுவை கௌரவித்தார்.

?அப்போது பேசிய ஒபாமா?

✔மாணவர்களின் அறிவுத்திறனை ஊக்குவிக்க வேண்டும், எவ்வகையிலும் ஒடுக்கக்கூடாது என்றார்.

✔சிறுவயதிலேயே இளம் விஞ்ஞானியாக வளம் வரும் அஹமது தம்முடைய லட்சியப்படி உலகத்திற்கே இலவச மின்சாரம் வழங்கி உலக சாதனை பெற இறைவன் நல்லருள் புரிவானக…

Close