அதிரையில் பசுமை புரட்சி!

adiraisumuka
அதிரை பொதுமக்களின் சுகாதாரத்தை முன்னிலைப்படுத்தி அதிரை சமூக ஆர்வலார்களால் உருவக்கபட்டு செயல்பட்டு வந்த அதிரை சுகாதார முன்னேற்ற கழகம் தற்போது  இரண்டு மாதங்களாக அதிரை பகுதி முழுவதும் பசுமை புரட்சியாக 10க்கும்  மேற்பட்ட இளைஞர்கள் இரவு பகல் பாராமல் பெரும்பான்மையாக புதுமனை தெரு,சிஎம்பி லைன்,நடுத்தெரு,கடற்கரை தெரு,மெயின் ரோடு ஆகிய பகுதியில் மரங்கள் நட்டு உள்ளனர்.மேலும் தற்போது மீதி உள்ள தெருக்களுக்கு மரங்கள் நட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது அதிரை பகுதியில் பசுமை புரட்சி ஏற்பட்டு உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெருவிக்கின்றனர். மேலும் இந்த முயற்சிக்கு அணைத்து தெரு பொதுமக்களும் ஆதரவு அளிக்குமாறும் அமைப்பு சார்பில் கேட்டுகொள்ளப்டுகிறது.
நீங்கள் பார்க்கும் புகைப்பட காட்சி அதிரை சுகாதார முன்னேற்ற கழகம் சார்பில் அதிரை காவல்துறை எதிரில் அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் அவர்கள் மரம் நட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

Close