Adirai pirai
articles இந்தியா

இவர் தான் உண்மையான ஆல்ரவுன்டர் – முராத் கந்தவரு அலி மனிக்பான்

12141558_986615261394891_6845053110509785517_nஅரேபியாவில் இருக்கும் அறிஞர்களை நாம் அறிந்து வைத்திருக்கும் அளவு அலிமனிக்பான் அவர்கள் எங்களுக்கு மத்தியில் பிரபலம் பெற்றிருக்கவில்லை. சமுத்திரவியலாளர், சுற்றுச்சூழலியலாளர், வானியல் நிபுணர், பிரபல வர்த்தகர் என்று அலி மனிக்பான் அவர்களின் பட்டங்கள் நீண்டு செல்கின்றன.

பசுமையான பூமி, விவாசயத்துறை போன்றவற்றுக்கும் அவர் மகத்தான பங்களிப்புக்களை வழங்கிவருகிறார். இஸ்லாமிய சட்டத்துறையில் ஆழமான அறிவு அவருக்கிருந்தாலும், சமுத்திரவியல், மற்றும் வானியல் துறைகளின் அவருக்கிருக்கும் ஈடுபாடு அதிகமாகும். இந்தியாவின் கேரளாவை பூர்வீகமாகக்கொண்;ட அலிமனிக்பான் ஆங்கிலம் ,அரபு, திவஹி, சிங்களம், ரஷ்யன் உட்பட 15 மொழிகளில் நிபுணத்துவம் பெற்றவார்.

ஆலி மனிக்பான் அவர்கள் 19 வகையிலான மீன் இனங்களை கண்டுபிடித்துள்ளார்கள். சமுத்திரவியல் உயிரியலாளரான கலாநிதி சாந்தப்பன் ஜோன்ஸ் அவர்கள்; அலிமனிபான் அவர்கள் பற்றி கூறியுள்ள கருத்துக்கள் ஆச்சரியமானவை ‘மனிக்பான் அவர்களின் ஆய்வு என்னை கவர்ந்துவிட்டது என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

இயற்கைக்கு உகந்த வகையில் அவரது ஆய்வுகளும், கண்டுபிடிப்பக்களும் அமைந்திருக்கின்றன. அலி மனிக்பான் அவர்கள் 1981ம் ஆண்டில் அயர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் டிம் செவேரின் (Tim Severin )என்பருக்காக ஒரு கப்பலைக் கட்டினார். 27மீட்டர் நீளமான கப்பலை நிர்மாணிக்கும் பணியை அலிமனிக்பான் வெறும் 12 மாதங்களில் கட்டிமுடித்தார். பண்டைய காலவடிவில் கட்டப்பட்ட கப்பலை நிர்மாணிக்க உலோகங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பது சிறப்பம்சமாகும்.

டிம் செவேரின் இந்தக் கப்பலில் ஓமானில் இருந்து சீனா வரை 9600 கீலோமீட்டர்கள் பயணிக்க 8 மாதங்கள் கடந்துள்ளன. டிம் செவேரின் தனது அனுபவத்தை The Sinbad Voyageஎன்ற நூலில் பகிர்ந்துகொண்டுள்ளார் அலிமனிக்பான் சந்திர நாள் காட்டியை அறிமுகம் செய்திருக்கிறார். ஹிஜ்ரி நாள் காட்டி மற்றும் பிறை சர்ச்சை போன்ற விடயங்கள் பற்றியும் அதற்கான தீர்வுகளையும் 1999ல் சவுதி அரேபிய அராசங்கத்திடம் சமர்ப்பித்தார் இது விரிவாக ஆராய வேண்டிய பகுதியாகும்

(டாக்டர் அஹமட் ருஷ்டி அவர்கள் இது பற்றி அலிமனிக்பானுடன் விரிவாக கலந்துரையாடடியதாகவும் எனக்கு அறியக்கிடைத்தது. அலிமனிக்பான் அவர்கள் டாக்டர் ருஷ்டயை சந்தித்த பின்னரே எனக்கும் ருஷ்டி அவர்களுக்கும் இடையிலான தொடர்பு ஏற்பட்டது) இந்திய ஹிஜ்ரி நாட்காட்டி குழுவின் தலைவராகவும் அவர் கடமையாற்றுகிறார் !

அலி மனிக்பான் ஆய்வாளர் என்ற வட்டத்திற்கு அப்பால் பணிவான ஒரு மனிதர். சுற்றுச்சூழலை நேசிப்பவர். அவர்களுக்கு 77 வயதாகிறது. அல்லாஹ்தஆலா அன்னாரின் ஆயுளை நீடித்து வைப்பானாகவும்.

“யாரும் எவரிலும் தங்கி வாழக்கூடாது ஒவ்வொருவரும் தமக்குரிய வாழும் வழியைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் நம்மில் தங்கியிருக்க வேண்டும்” – அலி மனிக்பான்(حفظ

இவரைக் குறித்து விக்கி பீடியா தகவல் களஞ்சியத்தில் அறிய
https://en.m.wikipedia.org/wiki/Ali_Manikfan

https://www.maldivesroyalfamily.com/minicoy_ali_manikfan.sht…

இவர் குறித்த ஆவணப்படம்
https://www.youtube.com/watch?v=EzdH80UM5Ns