அதிரையில் மக்கள் வெள்ளத்துடன் எழுச்சியுடன் நடைபெற்ற ம.ம.க வின் பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

அதிரையில் இன்று மாலை 6.30 மணியளவில் துவங்கி தக்வா பள்ளி அருகாமையில் ம.ம.க வின் மக்கள் பெருந்திரள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் M.R.முஹம்மது ஹாலிது அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பாக துவங்கிய இக்கூட்டத்திற்கு நகர பொருளாளர் M.O.செய்யது முஹம்மது புகாரி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.

இக்கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் I.M.பாதுஷா, எஸ்.அஹமது ஹாஜா, சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் எம்.சாகுல் ஹமீது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அப்துல் சலாம், பட்டுக்கோட்டை நகர துணை செயலாளர் G.வீரமணிகண்டன், மாவட்ட பொருளாளர் எம்.கபார், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் கே.கங்காதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஜபருல்லா, ஏ.ஆர்.சாதிக் பாட்சா, எம்.முஹம்மது இஸ்மாயில், ஏ.ஆரிபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தலைவர் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்களும், தமிழ்நாடு வக்ப் வாரிய உறுப்பினரும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஏ.அஸ்லம் பாட்சா அவர்களும், ம.ம.க மாநில செயலாளர் ஜே.கலந்தர் அவர்களும் வருகை தந்து சிறப்பித்தனர்.

இறுதியாக நகர துணை செயலாளர் எஸ்.நசுருத்தீன் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள். இந்த கூட்டத்திற்கு ஏராளமான அதிரையர்கள், மாற்றுமத சகோதரர்கள், பெண்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இந்த பொதுக்கூட்டத்தின் முழு நிகழ்வும் அதிரை பிறை மற்றும் சகோதர தளங்களின் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

wpid-wp-1445527062365.jpg  wpid-wp-1445525610034.jpg wpid-wp-1445525587957.jpg wpid-wp-1445525570326.jpg wpid-wp-1445522057627.jpg wpid-wp-1445522043020.jpg wpid-wp-1445525555792.jpg wpid-wp-1445522026191.jpg

Close