ஐயா எங்க ஊருல ரோட்ட காணோம்…!!

12170644_710115009125221_1557107684_nஅதிரை புதுமனைத்தெரு மற்றும் சி.எம்.பி லேன் ஆகிய பகுதிகளை இணைக்கும் நேரான நீளமான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தான் இமாம் ஷாபி பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சைக்கில்களில் சென்று வருகின்றனர். மேலும் நாள்தோறும் ஏராளமான இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் இந்த சாலையை கடந்து செல்கின்றன.

இந்த சாலை ஓரத்தில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டும், கட்டி முடிக்கப்பட்டும் உள்ளன. இந்த கட்டிட வேலைக்காக சாலை ஓரம் கொட்டப்படும் மணல் சாலைகளில் பரவி உள்ளன. இதனால் இதனை கடந்து செல்லும் வாகனங்கள் சறுக்கி விழுந்து வருகின்றனர். வீடு கட்டும் பலர் இந்த மணலை அள்ளாத காரணத்தால் சாலையே மணலால் மூடப்பட்டு சாலை இருந்த தடமே தெரியவில்லை.

எனவே சாலையில் உள்ள மணலை உடனே அள்ள நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட வார்டு மெம்பர், பேரூராட்சி தலைவர் ஆகியோருக்கு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Close