Adirai pirai
posts

மதம் கடந்த மனித நேயம்! கோட்டைப்பட்டினம் அருகே விபத்துக்குள்ளான ஐயப்ப பக்தர்களுக்கு உதவிய முஸ்லிம்கள்!

அதே போல (16/12/2014) அன்று நள்ளிரவில் விபத்தில் சிக்கிய அய்யப்ப பக்தர்கள் தென்காசியிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது சிவகிரி அருகே தரணி சுகர் பேக்டரி பகுதியில், அய்யப்ப பக்தர்களுடன் இரவு 11.30 மணியளவில் சென்றுகொண்டிருந்த மினி பேருந்து, சாலையில் கிராஸ் செய்துகொண்டிருந்த மாட்டின் மீது மோதியதில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இதில் மாடு அங்கேயே இறந்துவிட்டது. விபத்தில் சிக்கிய பேருந்தின் மீது பின்னால் வந்த கார் மோதியதில் காரில் வந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து இரண்டு 108 ஆம்புலன்ஸ் அங்கு வந்துள்ளன.

அப்போது தமுமுகவின் தலைமை ஆம்புலன்சும் அவ்விடத்திற்கு வந்தது. படுகாயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த பக்தர்கள் அடுத்த ஆம்புலன்சுக்காக ஏங்கிக் கொண்டிருந்தனர். நிலைமையை அறிந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அக்பர், உடனடியாக 10 அய்யப்ப பக்தர்களை சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தார். அப்போது மணி இரவு 12.30!

தமுமுகவின் சேவையை நன்றியோடு பாராட்டினார்கள் காயமடைந்த அய்யப்ப பக்தர்களும், மருத்துவமனை ஊழியர்களும்

Advertisement

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy