அதிரை சேர்மனின் அசத்தலான புதிய அறிவிப்பு!

Untitled-1

அதிராம்பட்டினம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஓர் ஊர். இங்குள்ள மக்கள் இஸ்லாமிய வழிமுறைப்படி தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு கத்னா செய்வது வழக்கம். இதற்காக தனியார் மருத்துவர்களிடம் பெருந்தொகை கொடுத்து கத்னா செய்கின்றனர். இதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும் வகையில் அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் ஒரு அருமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது அதிரை அரசு மருத்துவமனையில் இஸ்லாமிய மருத்துவர்கள் மூலம் விடுமுறை நாட்களில் ஒரு முகாமினை நடத்த உள்ளனர். இந்த அறிவிப்பு அதிரையில் உள்ள ஏழை எளிய இஸ்லாமிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தும்  இல்லை. இந்த அருமையான முயற்சியை மேற்கொள்ளும் அதிரை சேர்மன் அவர்களுக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறொம்.

Close