Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் கடலில் கலக்கும் தண்ணீரை குளங்களுக்கு திருப்பும் முயற்சியில் சேர்மன் அஸ்லம் (வீடியோ மற்றும் படங்கள் இணைப்பு)

adirai chairman aslamஅதிரையை கடந்து செல்லும் நசுவினி ஆற்றுத்தண்ணீர் பல ஆண்டுகளாக அதிரையை அடுத்துள்ள கடலில் வீனாக கலந்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் பல சமுக ஆர்வலர்கள் அதனை நமதூர் குளங்களுக்கு திருப்புமாறு கோரிக்கை வைத்தனர். இதனை அதிரை சேர்மன் அஸ்லம் நடைமுறைப்படுத்த கடந்த பல மாதங்களாக முயற்சி செய்து வந்தார். இதற்கு பலனளிக்கும் விதமாக இந்த தண்ணீர் பம்பிங் முறையில் அதிரை சி.எம்.பி வாய்க்கால் மூலமாக நீர் பெறும் குளங்களான ஆலடிக் குளம், புள்ள குளம், மரைக்கா குளம், கரிசல்மணி குளம், செக்கடிக் குளம், காட்டுக்குளம் போன்றவற்றுக்கு திருப்பப்பட உள்ளது.

இதன் முதல் கட்டமாக நேற்று திறந்துவிடப்பட்ட தண்ணிர் அதிரை ஆலடிகுளத்திற்க்கு சென்று நிரம்பி வருகிறது. இந்த குளம் நிறைந்த பின்னர் அடுத்தடுத்த குளங்களுக்கு தண்ணீர் நிரப்பப்பட உள்ளது. இது குறித்து அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் நமது அதிரை பிறை செய்தியாளரிடம் அளித்த பேட்டி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.