நேர்மை – அதிரை பிறை வாசகர் இல்யாஸ் அவர்களின் கட்டுரை

wpid-honest-person-wins-vs-dishonest-competitors-strong-reputation-si-d-word-lifted-as-crushed-their-dishonesty-43442499.jpgஉலகில் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய செயலிது . நேர்மை  எனபது காசு பணத்தில் மட்டும்மல்ல , சொல் மற்றும் செயல்களிலும்  நிலைத்து நிற்க வேண்டும். மனதால் கூட நேர்மையை கடைபிடிக்க வேண்டும்.சிலர் இந்த வார்த்தையின் அர்த்தத்தை தன் சுயலாபத்திற்காக எப்படி வேண்டாலும் காலத்திற்கு ஏற்ப மாற்றி கொள்வார்கள் .

வியாபாரங்களில் ஏமாற்றுவது எனபது காசு பணத்தை மோசடி செய்வது என்பதை  நாம் அறிந்ததே. அது என்ன சொல்லிலும் செயலிலும் நேர்மை ?

கொடுத்த வாக்குறுதியை மீறுவது , காலத்திற்கேற்ப நம்மை சார்ந்தவர்களை விரட்டியடிப்பது , எதிரிகளோடு இனைந்து பணியாற்றுவது, பொய் சொல்லுவது, இரண்டு நபர்களை பிரிப்பது, நம்மை நம்பியவனை ஏமாற்றுவது என்று அடுக்கி கொண்டே போகலாம்.

நம் எண்ணம் எப்படியோ அவ்வாறே செயலும் நம் செயலும் அமையும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்துமல்ல.

இதை இஸ்லாம் எவ்வாறு பார்கின்றது?

சூரா ப q கறாவில் அல்லாஹு தாலா கூறுகிறான்,

2:42   وَلَا تَلْبِسُوا الْحَـقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَـقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ‏

“நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்”.

ஆக்கம்: A.S.M.முஹம்மது இல்யாஸ் (அபு ஹுமார், கத்தார்)

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close