அதிரையே படை திரண்டு வந்த ஜாவியால் புஹாரி ஷரீப் இறுதி நாள் நிகழ்ச்சி

அதிரையில் பல்லாண்டுகளாக ஜாவியாலில் புஹார் ஷரீப் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் இறுதி நாள் நிகழ்ச்சி இன்று காலை ஃபஜ்ரு தொழுகைக்கு பிறகு திக்ரு மஜ்லிஸுடன் சிறப்பாக துவங்கியது. இதனை அடுத்து புஹாரி ஷரீப் ஓதப்பட்டது. பின்னர் 7.45 மணியளவில் ரஹ்மானியா மதர்ஸா முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம் அவர்களின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து துஆ ஓதப்பட்டு தஃப்ரூக் வழங்கப்பட்டு நிகழ்ச்சி முடிவடைந்தது. இதில் 1000க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் ஆண்கள் ஜாவியால் வளாகத்திலும் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் அருகில் உள்ள வீடுகளிலும் கலந்துக்கொண்டனர்.

குறிப்பு: ஜாவியால் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கினங்க ஜாவியால் உள்ளே புகைப்படம் எடுக்கவில்லை

12179044_711119909024731_101279430_n

Close