இஸ்லாத்தை அனைத்து நிலைகளிலும் விட்டுக்கொடுக்காத தென் ஆப்பிரிக்க முஸ்லிம் வீரர்கள்!

கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல நகரங்களில் இந்தியா தென் ஆப்பிரிக்க அணியினர் மோதும் 20 ஓவர் மற்றும் ஒரு நாள்  கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெற்றன. நேற்றைய தினம் நடைபெற்ற ஒருநாள் தொடரின் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று முதல் முதலாக கோப்பையை கைப்பற்றியது.

இதில் தென் ஆப்பிரிக்க அணியில் ஹாஷிம் அம்லா, பெஹர்தீன், இம்ரான் தாஹிர் ஆகிய மூன்று இஸ்லாமிய வீரர்கள் கலந்துக்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்த தொடரில் இவர்களுடைய சீருடையில் மட்டும் பிற வீரர்களை போன்று அல்லாமல் CASTEL LANGER என்ற விளம்பரம் இல்லாமல் இருக்கும். இது குறித்து பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும்.

இதன் காரணம் CASTEL LANGER என்பது தென் ஆப்பிரிக்க மதுபான உறுபத்தி நிறுவனம் என்பதால் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட மதுபானத்தை உற்பத்தி செய்யும் நிறுவன விளம்பரத்தை தங்கள் சீருடையில் இல்லாமல் விளையாடினர். இதற்காக அந்த நிறுவனத்துக்கு பெரும் தொகையை அபராதமாக செலுத்துகின்றனர்.

தான் விளையாடுவது கிரிக்கெட் தான் என்றாலும் அதில் வரும் ஹலால் எது ஹராம் எது என்பதனை சரியாக அறிந்த பின்னர் அதில் இருந்த தவிர்த்துக்கொள்ளும் இந்த வீரர்கள் பிறருக்கு ஓர் முன் உதாரணம்

prv_136a0_1445802273

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

 

Close