அதிரையில் கவிழ்ந்த லாரியின் கண்டெய்னர் அதே இடத்தில் கிடப்பதால் போக்குவரத்து பாதிப்பு!

தூத்துக்குடியை சேர்ந்தவர் ராஜ்குமார். லாரி ஓட்டுனரான இவர் தான் ஓட்டும் லாரியில் மார்பில் கற்களை தூத்துகுடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அதிரையில் பேருந்து நிலையம் அருகே இந்த லாரி வந்துக்கொண்டிருந்தபோது வேகமாக வலைய முற்பட்ட லாரி நிலைதடுமாறி கீழே சாய்ந்தது. உடனே அருகில் இருந்த கடை காரர்கள் லாரி ஓட்டுனர் ராஜ்குமாரை பத்திரமாக மீட்டனர் எதிர்பாரதவிதமாக நடந்த இந்த விபத்தில் அல்லாஹ்வின் உதவியால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இதனை அடுத்து நேற்று சுமார் மதியம் 2:45 மணியளவில் இந்த லாரி தவிர போராட்டத்துக்கு பின்னர் தூக்கி நிறுத்தப்பட்டது. ஆனால் இன்னும் அந்த லாரி கண்டெய்னரை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்படாததால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது.

12188669_1673553949552320_988070519_n

 

Close