அதிரை இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் நவம்பர் முதல் தேதியன்று காலை ஆறரை மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பிரிவு ஊர்காவல் படையில் சேர்வதற்காக ஆண்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் சேர விருப்பம் உள்ள நபர்கள் பத்தாம் வகுப்பு சான்றிதழுடன் , குடும்ப அட்டை நகலுடன் நேரில் வர வேண்டும், குறிப்பாக தேர்வு நடைபெறும் பகுதியில் இருந்து எட்டு கிலோமீட்டர் சுற்றளவிற்குட்பட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும், 18 வயது முதல் 50 வயது வரையிலான நபர்கள் கலந்துகொள்ளலாம் , அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தேர்வு நடத்துபவர்கள் கூறினர். விருப்பம் உள்ளவர்கள் கலந்துகொண்டு பயண்பெறலாம்.

Close