Adirai pirai
FLASH NEWS உள்ளூர் செய்திகள்

FLASH NEWS: அதிரையில் நடக்கவிருந்த பயங்கர விபத்து தவிர்ப்பு – EXCLUSIVE REPORT (படங்கள் இணைப்பு)

serman vadi traff1

திரை சேர்மன் வாடி பேருந்து நிறுத்தத்தை இன்று காலை 8:30 மணியளவில் சென்னைக்கு சென்று கொண்டிருந்த கனரக கண்டெய்னர் லாரி கடக்க முயன்றது. இந்நிலையில் நமது அதிரை பிறையில் கடந்த 4 வருடங்களாக ஆபத்தான நிலையில் ஒரு மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதாக செய்திகள் பதிந்துவந்தோமே!!! அந்த மின் கம்பத்தின் வயர்கள் தாழ்வான நிலையில் சென்று கொண்டிருந்ததால் அந்த மின் கம்பிகள் உயர்மான கண்டெய்னர் மீது சிக்குவது போல் காணப்பட்டன.

உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் மற்றும் கிளீனர் லாரியை உடனே நிறுத்தினர். இதனை லாரி கடந்து செல்ல முடியாது  அங்கிருந்த போதுமக்கள் போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த இடைவெளிக்குள் சேர்மன் வாடியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து சேர்மன் வாடிக்கு விரைந்த அதிரை போலிசார் வாகன நெரிசலை கடும் போராட்டத்திற்கு பிறகு சரி செய்தனர். இந்த வயர் கம்பிகளை மேலே உயர்த்துவதற்காக சிறிது நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனை அடுத்து லாரி கிளீனர் மேலே ஏரி மின் கம்பியை உயர்த்தினார். பிறகு லாரி மெல்ல நகர பின்னால் நின்று கொண்டிருந்த வாகங்களும் கடந்து சென்றன.

சுமார்30 நிமிடங்கள் நீடித்த இந்த வாகன நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy