அதிரையில் ஒரு கிலோ கொடுவா ரூ.385, காளை ரூ.300!

wpid-img-20151025-wa0020திரை பெரிய மீன் மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக அதிரையர்களால் விரும்பி உண்ணப்படும் மீன்களான கொடுவா மற்றும் காளை மீன் வகைகள் வரத்து அதிகமாக உள்ளது. விலை சற்று அதிகமாக இருந்தாலும் அதிக சுவை தரும் மீன்களான இவை இரண்டையும் அதிரையர்கள் ஆசையுடன் வாங்கி செல்வார்கள். எவ்வளவு அதிகமாக மீன் இருந்தாலும் இவை உடனே விற்று தீர்ந்துவிடும்.

இன்றும் இந்த மீன்கள் அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் அதிக அளவு குவிந்துள்ளன. இதில் ஒரு கிலோ கொடுவா மீன் 385 ரூபாய்க்கும், ஒரு கிலோ காளை மீன் 300 ருபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Close