அதிரைக்குள் அத்துமீறி நுழைந்து ஆபத்தில் சிக்கும் கனரக வாகனங்கள்!

12182255_711165519020170_2050661234_nமது ஊர் சாலைபோக்குவரத்தில் முன்னேற்றம் கண்டுவருகிறது. அதேபோல் வாகனம் மற்றும் வாகனவிபத்துகளும் அன்றாட அதிகம் பெருகிவிட்டது இதை கவனத்தில் கொண்டு நமது ஊருக்குள் வரும் கணரகவாகனங்கள் கிழக்கு கடல்கரை சாலை வழியாகபோகும் வாகனங்களை நமது ஊர் பேருந்துநிலையதில் திருப்பி பட்டுகோட்டைக்கு செல்வதை தடுக்கவேண்டும் அதை குறிப்பிட்டநேரத்தில் மட்டும் அனுமதிக்கவேண்டும். இதனை கடைபிடிக்கததால் தான் இன்றும் நேற்று முந்தினமும் கண்டெய்னர் லாரிகள் விபத்துக்குள்ளாகின.

காலை 6 மணிமுதல் இரவு 7மணிவரை பேருந்துநிலையம் வழியாக சேர்மன்வாடி சாலையை கடந்து செல்ல இந்த நேரங்களில் தடை விதிக்கவேண்டும் மேலும் சாலை குறியீட்டு பாதகைகளை ஆங்காங்கு மக்களின் பார்வையில் படும்படி வைக்கவேண்டும் சாலை பாதுகாப்பு பற்றி காவல்துறை அதிகாரிகளுடன் இனைந்து சாலாபாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

இப்படிக்கு,

M.முஹம்மது முஹ்சின் நடுத்தெரு

Close