Adirai pirai
articles islam

பொறுமை – அதிரை இலியாஸ்

image

                            பொறுமை

வாழ்வியலில் மிகவும் கடைபிடிக்க வேண்டிய செயலிது .  ஒருவர் தனக்கு தேவையான காரியங்களில் இறங்கும்பொழுது , அவர் அவசரம் காட்டலாம். சிலருக்கு நினைத்தபடி காரியங்கள் நிறைவேறிடும்.சிலருக்கு முடிவு பாதகமாக அமையக்கூடும்.

பொறுமை இழந்தால், அதன் முடிவு எங்கு கொண்டு போய் சேர்க்குமென்று  தெரியாது. சிகரத்தில் இருப்பவனை சேற்றிலும் இறக்கி விடலாம். பதற்றம் அதிகரித்து இரதாழுத்தம் ஏற்பட்டு மேலும் இழப்புக்கள் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. ஒருவரின் நிலை என்றுமே ஒரே மாதிரியாக  இருக்காது.

” பொறுத்தார் பூமியாழ்வார் ” என்பது  தமிழ்க்  கூற்று.

பொறுமையுடையவர் , தனக்கு ஏற்படும் சோதனைகளை மிக நேர்த்தியாக கையாண்டு சாதனை படைப்பார்கள். அது வியாபாறியகட்டும் , பனிக்கு செல்பவராகட்டும் , பள்ளிக்கு செல்லும் மாணவர்களாகட்டும் , எவராயினும் பொறுத்து போவது தலையாய சிறந்தது. இன்று தின செய்திகளில் வாகன விபத்து எனபது ஒரு அங்கமாகவே அமைந்து விட்டது, காரணம் பொறுமையின்மை. “அடுத்தவர் முதலில் போகட்டும்” , “வழி விடுவோம் ” என்ற மனப்பான்மையை உருவாக்கிக்கொண்டு செல்வோமாயின் பல விபத்துகளை தவிர்த்திடலாம்.

பொறுமையிழந்தால் பொறாமையில் விட்டு செல்லும். பார்த்தீர்களா, இந்த இரு சொற்களுக்கும் எவ்வளவு தொடர்பென்று . பொறுமை இழப்பதினால் ஒருவரின் சுய புத்தி இழந்து  வாழ்வு சுண்டி போகலாம்.நமது உடலில் தலை எப்படி முக்கியமான அங்கமாக இருக்கிறதோ அவ்வாறே நம் குணத்தில் பொறுமை ஓர் அங்கம்.

இஸ்லாத்தின் பார்வையில் ,

2:45   وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ‌ؕ وَاِنَّهَا لَكَبِيْرَةٌ اِلَّا عَلَى الْخٰشِعِيْنَۙ

2:45. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy