அதிரையில் பல ஆண்டுகளுக்கு பின் முழுவதுமாக நிரம்பிய செட்டியான் குளம்!

அதிரையில் கடந்த சில மாதங்களாக பேரூராட்சியால் குளங்களுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் அதிரையில் கடந்த பெரும்பாலான் குளங்கள் தண்ணீர் நிரம்பி எழிலுடன் காட்சிதருகின்றன. அந்த வகையில் அதிரையின் மிகப்பெரிய குளங்களுல் ஒன்றான செடியன் குளமும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதாலும், தொடர் பெய்து வரும் கனமழை காரணமாகவும் முழுவதுமாக நிறைந்துள்ளது. 

இது குறித்து இப்பகுதி வாசி ஒருவர் கூறுகையில் இக்குளம் பல வருடங்களாக அதிரையில் நிறையாமல் சாக்கடைக் குளமாக காணப்பட்டது. இந்நிலையில் இக்குளம் சென்ற் ஆண்டு தூர்வாரப்பட்டு அழகாக சுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் செக்கடி குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் இக்குளத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் குளம் தற்போது முழுவதுமாக நிரம்பி தண்ணீர் குழுங்க குழுங்க காட்சியளிக்கிறது.

Advertisement

Close