இந்தியாவிலேயே மிகவும் உயரமான மனிதர் மரணம்!

 

indian heightஇந்தியாவிலேயே உயரமான மனிதராக இருந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த குத்தையா மாரடைப்பால் மரணமடைந்தார். தெலுங்கானா மாநிலம் கரிம்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட புட்னூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கே.குத்தையா (வயது 40). 7 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட இவர், இந்தியாவின் மிகவும் உயரமான மனிதர் என்று வர்ணிக்கப்பட்டார்.

மேலும் ஆசிய அளவில் 2-வது இடத்திலும் இருந்தார். ஐதராபாத் நகரில் வசித்து வந்த அவரை ஏராளமானோர் வந்து பார்த்து சென்றனர்.

குடிசைத்தொழில் பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வந்த குத்தையா, சமீப காலமாக நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் அங்குள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு குத்தையாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் நேற்று காலையில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தியாவின் உயரமான மனிதரான குத்தையாவின் மரணத்தால், அவரது கிராமத்தில் பெரும் சோகம் நிலவி வருகிறது.

Close