Adirai pirai
INFORMATION இந்தியா

வெளிநாடு வாழ் இந்தியர்களும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம்

image

வெளிநாடு வாழ் இந்தியர்கள், nps எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவிலுள்ள தங்கள் வங்கிக் கணக்கில் வழக்கமாக பணம் செலுத்தும் முறையிலேயே ஓய்வூதிய திட்டத்துக்கான சந்தாவையும் செலுத்தலாம் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தில் சேரும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென தனியாக எந்த ஒரு கட்டுப்பாடும் நிபந்தனையும் விதிக்கப்படாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடிமக்கள் அனைவரும் தங்கள் ஓய்வு கால பணத் தேவைகளை சமாளிப்பதற்காக தேசிய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.