ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 643 கிலோமீட்டர் காரில் செல்லலாம், நவீன பேட்டரி தயார்!

image

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் போன்றவற்றுக்கு பதிலான மாற்று உந்துசக்தியாக ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 400 மைல் (சுமார் 643 கிலோமீட்டர்) வரை தங்குதடையின்றி செல்லும் வகையில் கையடக்கமான நவீன லித்தியம் பேட்டரியை இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபோன்ற ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் கடந்த பத்தாண்டுகளாகவே நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது இதில் மேம்பாடான கட்டம் எட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியான இன்னும் சில சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கான மேலும் சில ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் போன்றவற்றுக்கு பதிலான மாற்று உந்துசக்தியாக இந்த ‘லித்தியம்-ஐயான்’ பேட்டரிகள் உருவெடுக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

Close