அதிரையர்களை அலையவிடும் அரசு அதிகாரிகள்

image

அதிரையர்கள் தங்களுக்கு தேவையான வீட்டு சான்றிதல்கள், வருமான சான்றிதழ்கள் போன்றவற்றை கல்வி உதவி போன்ற முக்கிய தேவைகளுக்காக பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலம் சென்று விண்ணப்பிக்கின்றனர். இவ்வாறு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பல மாதக்கணக்கில் வழங்கப்படாமல் மக்களை இன்று நாளை என அலைக்கழித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு தாமதமாக வழங்கப்படும் சான்றிதல்கள் தகுந்த சமயத்தில் இல்லாததால் மக்கள் பல அரசு சார்ந்த சலுகைகளை பெற தவறிவிடுகின்றனர்.

இதனால் பல மாணவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஸ்காலர்ஷிப் தொகையை இழக்க நேரிடுகிறது. இனிமேலாவாது அரசு அதிகாரிகள் மக்களின் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்ந்து தங்கள் பணியை சரியாக செய்வார்களா???

Close