இந்தியர்களின் நலனுக்காக சவூதி அரேபியாவில் 3 பாஸ்போர்ட் சேவை மையங்கள்: வரும் ஜன.1 முதல் துவக்கம்!

வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பலர் தங்களது குடும்பத்துடன் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் நலன்களை பாதுகாக்கவும், சவுதி அரசுடனான தூதரக உறவுகளை பலப்படுத்தவும் இங்குள்ள இந்திய தூதரகம் ஜெட்டா, மக்கா, அல் பாஹா, அபா/ கமிஸ் முஷ்யாட், ஜிஸான், மதினா, நஜ்ரன், தபுக், தாயிப், யான்பு ஆகிய நகரங்களில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான சேவைகளை செய்து வருகின்றது.

இந்நிலையில், இங்கு வசிக்கும் இந்தியர்களின் பாஸ்போர்ட்களை புதுப்பித்தல், விசா மற்றும் இதர தூதரக சேவைகளை சிரமமின்றி, விரைவாக வழங்குவதற்காக இங்குள்ள  ஜித்தா , அபா மற்றும் தபுக் ஆகிய நகரங்களில் 3 சேவை மையங்கள் வரும் ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து தொடங்கப்பட உள்ளதாக இங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘வி.எப்.எஸ்.’ குளோபல் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து திறக்கப்படவுள்ள இந்த சேவை மையங்களில் பாஸ்போர்ட்களை புதுப்பித்தல், விசா பெறுதல் போன்ற அனைத்து நடைமுறைகளும் நிறைவேற்றித்தரத்தக்க வகையில் முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Close