அதிரை ஷாகுல் தலைமையில் அபுதாபியில் நடைபெற்ற அய்மான் சங்க நிர்வாகக் குழு கூட்டம்

image

image

அய்மான் சங்க நிர்வாகக் குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமையில் அபுதாபியில் நேற்றிரவு நடைபெற்றது.

கூட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீத், கீழை சையது ஜாஃபர், செயலாளர் லால்பேட்டை அப்துல்ரஹ்மான், செயற்குழு உறுப்பினர்கள் காயல் வி.எஸ்.டி.ஷேக்னா, லால்பேட்டை முஹம்மது அப்பாஸ், கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ், நாகூர் ரஷீத் மரைக்காயர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

எதிர்வரும் 5 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பேராசிரியர் முனைவர் சேமுமு முஹம்மது அலி அவர்கள் பங்கேற்கும் ஹிஜ்ரா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துதல்

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு டிசம்பர் 3 ஆம் தேதி அன்று அபுதாபி ஏர்போர்ட் பூங்காவில் அபுதாபியில் உள்ள தமிழக பெருமக்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துதல்

அபுதாபியில் உள்ள தமிழக உலமாக்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை அய்மான் சங்கத்தின் மூலம் நடத்துதல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Close