Adirai pirai
posts

முத்துப்பேட்டையில் காவல் நிலையம் முன்பு வாலிபர் ஒருவரை சரமாரியாக தாக்கிய கும்பல்!

   
 முத்துப்பேட்டை காவல் நிலையம் எதிரே உள்ள ஒரு கடை வாசலில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று நின்று கொண்டிருந்தார். அப்பொழுது காரில் வந்து இறங்கிய ஒரு கும்பல் அவரை சரமாரியாக நீண்ட நேரம் அடித்து உதைத்து தாக்கினர். நிலைத் தடுமாறிய அவர் அடித்தாங்க முடியாமல் கீழே மயங்கி விழுந்தார். அப்பொழுது அவர் மீது அந்த கும்பல் ஏரி நின்றும் மிதித்தது. இந்த சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஒடினர். சத்தத்தை கேட்டு அங்கு வந்த போலீசாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது வாலிபரை தாக்கிய அந்த கும்பல் எந்தவித பதற்றமும் இல்லாமல் அங்கிருந்து சென்றனர். அதன் பிறகு சில நிமிடங்களில் அங்கு வேறொரு காரில் வந்த ஒருவர் தாக்கப்பட்ட அந்த வாலிபரை தூக்கி காரில் எற்றி சென்றார். பட்டபகலில் வாலிபர் ஒருவர் காவல் நிலையம் முன்பே போலீசார் முன்னிலையில் தாக்கப்பட்ட சம்பம் முத்துப்பேட்டை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  

தகவல்
செய்தி: நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை