உடையாத இரும்பு போன்ற டச் ஸ்க்ரீன் டிஸ்பிளேவை கண்டுபிடித்த ஜப்பான் விஞ்ஞானிகள்

image

தற்போது ஸ்மார்ட்போன்களில் பெரும் சவாலான ஒன்றாக இருப்பது டச் ஸ்கீரின் உடைந்துவிடுவதே. இதற்காக பல ஆராய்ச்சியாளர்களும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், டோக்கியோ பல்கலைக்கழகமும், ஜப்பானின் சின்குரோட்ரான் ரேடியேசன் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டும் இணைந்து இரும்பு போன்ற உறுதியான ஸ்மார்ட்போன் டச் ஸ்கிரீனை உருவாக்கியுள்ளது. அதிக அளவிலான அலுமினியம் ஆக்சைடை கலந்து இந்த டச் ஸ்கிரீன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரையை அவ்வளவு எளிதாக உடைக்க முடியாது. இந்த உறுதியான கண்ணாடியை வான்முட்ட உயர்ந்திருக்கும் உயரமான கட்டிடங்கள், ஸ்மார்ட்போன்கள், டேப்லட்டுகள் ஆகியவற்றில் உபயோகிக்க முடியும். இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்த ஆராய்ச்சி முடிவுகள் சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் ஜர்னலில் வெளியாகியுள்ளது.

Close