அதிரையில் கஷ்டப்படும் கடைசி வார்டு மக்கள்! (படங்கள் இணைப்பு)                 

 

பல வருடங்களாக சி.எம்.பி பகுதியில் தார் சாலை அமைக்காததால், சாலையில் குண்டும் குழியும் மட்டும் தான் இருக்கிறது. மேலும் தற்போது மழைகாலமுன் தொடங்கிவிட்டதால் அப்பகுதியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்க்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் அதுமட்டுமின்றி அப்பகுதியில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் போக்குவரத்திற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதில் வாகனம் ஓட்டும் அனைவரும் பயந்து பயந்து ஓட்டுகின்றனர். அப்பகுதியில் சாக்கடை ஓடுவதால் துர்நாற்றமும் அதிகளவில் வருகிறது. அத்துடன் சேர்ந்து குப்பைகளும் கிடப்பதால் மட்டமான சூழ்நிலையில் சி.எம்.பி பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சாலையின் குறுக்கே ஆறு போல் ஓடும் மழை நீர்

Close