திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு !விமானத்தில் பெட்ரோல் கசிவு ரன்வேயில் ஓடிய போது கண்டுபிடிப்பு! 158 பயணிகள் உயிர் தப்பினர்!

திருச்சி: திருச்சியில் இருந்து
சிங்கப்பூருக்கு 158 பயணிகளுடன்
புறப்பட்ட விமானத்தில் எரிபொருள்
கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விமானத்தை நிறுத்தி
பயணிகளை இறக்கி விட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. திருச்சி
விமான நிலையத்திலிருந்து
சிங்கப்பூருக்கு டைகர் ஏர்வேஸ் விமானம்
இயக்கப்படுகிறது. இது தினமும் இரவு
10.50க்கு திருச்சி வந்து, பயணிகளை
ஏற்றிக்கொண்டு 11.40 மணிக்கு புறப்படுவது வழக்கம்.நேற்றுமுன்தினம்
இரவு 10.50 மணிக்கு,
சிங்கப்பூரிலிருந்து டைகர் ஏர்வேஸ்
விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த
பயணிகளை இறக்கவிட்ட பின்,
இமிகிரேஷன் சோதனை முடிந்து தயார் நிலையில் இருந்த 158 பயணிகளை ஏற்றி
கொண்டு விமானம் புறப்பட்டது. ரன்வேயில் சென்று
கொண்டிருந்தபோது விமானத்தின்
இன்ஜின் பகுதியிலிருந்து பலத்த சத்தம்
கேட்டது. இதையடுத்து விமானி,
விமானத்தை நிறுத்தி விட்டு விமான
நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பணியாளர்கள் விமானத்தை
சோதனை செய்த போது இன்ஜின்
ஸ்டாட்டர் பகுதியில் எரிபொருள்
கசிந்தது கண்டறியப்பட்டது. இதை
தொடர்ந்து விமானத்தில் இருந்த 158
பயணிகளையும் இறக்கி விட்டனர். பின்னர் அவர்கள் திருச்சியில் உள்ள தனியார்
ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து சென்னையில் உள்ள விமான
இன்ஜினியர்களுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. நேற்று திருச்சி வந்த
இன்ஜினியர் குழு இன்ஜின் பகுதியில்
ஏற்பட்ட எரிபொருள் கசிவை சரிசெய்யும்
பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை எரிபொருள் கசிவு சரிசெய்யப்பட்ட
பின்னர் 158 பயணிகளுடன் விமானம்
சிங்கப்பூர் புறப்பட்டது.

Close