அதிரை மக்கள் கொட்டும் மழையில் கலந்துக்கொண்ட தமீம் அன்சாரி அவர்களின் பொதுக்கூட்டம்(படங்கள் இணைப்பு)

image

அதிரையில் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு சேதுரோடு சாரா மண்டபத்தில் துவங்கி நடைபெற்றது. இதில் தமீம் அன்சாரி அவர்கள் கலந்துக்கொண்டு இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார விரோதப் போக்குகளையும் நடுவன் அரசின் குறைபாடுகளையும் எடுத்துரைத்தார். இதில் மாநில அமைப்புச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா, அதிரை சர்புத்தீன், மக்கள் உரிமை நிருபர் நாச்சிக்குளம் தாஜுத்தீன் மற்றும் பலர் கலந்துக்கொண்டார்.

இன்று காலை முதல் அதிரையில் கடும் மழை பெய்துவந்தது. நிகழ்ச்சியின் போதும் மழை பெய்து வந்தது. இதனை பொருட்படுத்தாமல் ஏராளமான அதிரையர்கள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துக்கொண்டவர்கள் அண்மை காலமாக ம.ம.க வில் நிகழ்ந்துவரும் பிளவுகள் குறித்து கேள்வி கேட்க அவகாசம் வழங்கப்பட்டது. இதில் அதிரையர்களின் கேள்விகளுக்கு தமீம் அன்சாரி பதில் கூறினார்.

மேலும் ம.ம.க வின் நடந்த பிளவுகள் குறித்தும் வெள்ளை அறிக்கை மக்களுக்கு வழங்கப்பட்டது.

image

image

image

image

image

image

image

image

இதில் தமீம் அன்சாரி அவர்களின் சொற்பொழிவுடைய வீடியோ நாளை நமது அதிரை பிறை தளத்தில் பதியப்படும்.

படங்கள்: சாலிஹ் மற்றும் நூருல்

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close