கடும் துயரத்தில் அதிரை பிலால் நகர் வாசிகள் ( படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த 2 நாட்களாக விடாமல் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் தரை மட்டத்திற்க்கு இருந்த அதிரையில் உள்ள சில குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
ஏற்கனவே நிறம்பியிருந்த குளங்களில் தண்ணீர் முழுவதுமாக நிரம்பி அக்கம்பக்கத்திற்கு வெளியேறி வருகிறது. அந்த வகையில் அதிரை செடியன் குளத்தில் தண்ணீர் நிரம்பி அருகில் உள்ள தாழ்வான பகுதியான பிலால் நகரை நோக்கி குளத்திலிருந்து செல்லும் உபரி நீர் வெள்ளமாக சூழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் குடிசைகளுக்குள்ளும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியினர் பல துயரங்களுக்குள்ளாகின்றனர். சாலைகளில் ஆறு போல் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

a

Advertisement

Close