மனித நேயம்….! ஐயப்ப பக்தர்களுக்கு உதவிய இஸ்லாமியர்கள்!

பரமக்குடியில் நேற்று இரவு 11.30 மணி அளவில் இராமேஸ்வரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த வாகனத்தில் ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்தனர். அப்போது அவ்வாகனத்தின் பின்பக்கஇரு டயர்களும் திடீரென பழுதடைந்ததால் பரமக்குடி ஐந்து முனை அருகில் பேருந்து நின்றது இதனால் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் செய்வதறியாமல் தவித்தனர்

தகவல் அறிந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல்லா சேட்,எஸ்.டி.டி.யூ மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலிபத்துல்லா,நகர் தலைவர் சுல்த்தான் அலாவுதீன் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அங்கு வந்து ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வாகனத்தை பழுது பார்த்து சீர் செய்தனர். இச்செயல்களை கண்ட ஆந்திரமாநில ஐயப்ப பக்தர்கள் மனம் மகிழ்ந்து பாராட்டி நன்றி கூறி விடை பெற்றனர்.


Advertisement

Close