FLASH NEWS: அதிரை அருகே சாலை விபத்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

image

அதிரை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55) விவசாயி ஆவார் .இவர் இன்று மதியம் தாமரங்கோட்டையிலிருந்து கிருஷ்ணாபுரத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாமரங்க்கோட்டை சாலையில் கார் ஒன்று இவர் மேல் பலமாக மோதி வேகமாக சென்றுவிட்டது. இதனையடுத்து இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இதனையடுத்து அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உடலை அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து அதிரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்கள். மேலும் இவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு நாளை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.விபத்தில் பலியான சுப்பிரமணிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Close