அதிரையில் மதுவிற்கு அடிமையாகி வரும் பள்ளி மாணவர்கள்! அதிர்ச்சி தகவல்!

          

          அதிரையில் அதிகரித்து வரும் மதுப்பான கடைகள் இந்த அதிகரிப்புக்கு காரணம் அதிரையில் அதிக மது பிரியர்களா?  அல்லது நாங்கள் கண்ட காட்சியா. நாங்கள் சில தினங்கள் முன்பு சில பள்ளி மாணவர்கள்  மதுப்பான கடையில் இருந்து வெளியில் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். அவர்களிடம் நாங்கள் பேச நினைத்தோம் .ஆனால் அவர்கள் அதிக  மது போதையில் இருந்தார்கள் . இதற்கு யார் காரணம் ?  இவர்கள் பெற்றோர் கண்காணிப்பில் வளர்கிறார்களா ?
       அசோசம் சோசியல் டெவ லப்மெண்ட் அசோசியேசன் என்ற நிறுவனம் இந்தியாவில் மது குடிக்கும் இளைஞர்கள் பற்றிய ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.
        இந்த கருத்துக் கணிப்பில் : 15 முதல் 19 வயதுக்குள் தான் மாணவர்கள் குடிகாரர்களாக மனம் மாறுகிறார்களாம். பீர் மட்டும் குடிக்கலாம் தப்பு இல்லை என்ற தவறான வழிகாட்டுதல் மாணவர்களை மதுபான பழக்கத்தை உண் டாக்குகிறது.  இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பிளஸ்-2 படிப்பவர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.
         எப்படி மதுவுக்கு அடிமை யானார்கள் என்பதற்கும் இந்த சர்வேயில் விடை கிடைத் துள்ளது. சமூக மாற்றங்களால் மாணவர்களிடம் ஏற்பட் டுள்ள அதிக பணப்புழக்கம், பெற்றோர்கள் கண்காணிப்பு குறைவது , புதிய வகை கொண்டாட்டங்கள் போன்றவை மாணவர்களை குடிகாரர்கள் ஆக்கி விடுவதாக தெரியவந்துள்ளது.   
         மதுபானம் குடிக்கும் இளைஞர்கள், மாணவர் களில் 99 சதவீதம் பேர், ““சும்மா ஜாலியாக தொடங்கிய பழக்கம், வாழ்வையும், குணத்தையும் அழித்து எதிர்காலத்தை திசை திருப்பி விட்டது”” என்று கண்ணீர் மல்க கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அல்-குர்ஆன் மதுபானத்தை தடை செய்துள்ளது:
           அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90வது வசனத்தின் மூலம் அல்லாஹ் மதுபானம் அருந்துவதை தடைசெய்துள்ளான்:
‘விசுவாசம் கொண்டவர்களே!. மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 05 – வசனம் 90)
        இதனால் ஏற்படுவது அதிக சாலை விபத்து , கல்லீரலில் பாதிப்பு, மயக்கத்தில் ஆழ்த்துதல், மூளையைப் பாதித்து அதன் செயல்திறனைக் குறைக்கிறது, பசி இழப்பு.
         இதை தடுக்க பெற்றோர் தன் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் ,தேவைக்கு அதிகமான பணம் கொடுப்பது நிறுத்த வேண்டும் .
   
 “மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு! மதுவால் வருமானம் அரசுக்கு அவமானம்!!”

தகவல் : N.காலித் அஹ்மத்   (அதிரை பிறை நிரூபர்)

Close