தாலிபான்கள் என்னும் கூலிப்படைகள்!

 
பசுத்தோல் போர்த்திய
பயங்கரப் புலிகள்
இசுலாம் கூறிடா
இழிசெயற் கூலிகள்!
 
வேலையற்றோர் கூடாரம்
வீணர்களின் குழுவாகும்
மூளையற்றோர் இவராலே
முசுலிமுக்கு இழிவாகும்!
 
சொந்த தேசத்தின்
சொத்துகள் குழந்தைகளாம்
எந்த மூடர்கள்
இப்படி அழித்திடுவர்?
 
”மாணவர்கள்” பெயருடன்
மாண்புக்கு ஊனமன்றோ?
மாணவர்கள் உடலழித்து
மார்தட்டல் ஈனமன்றோ?
 
பின்னாளில் இப்படிப்
பிற்போக்காய் வருமென்று
முன்னோர்கள் எங்களை
முற்கூட்டித் தடுத்திட்டார்!
 
பிரிந்து என்பயன்?
பிணங்களே  கூடின
வரிந்து வன்முறை
வலிகளே தேடின!

மார்க்கத்தின் துரோகி
மன்னிப் பெளிதா
மூர்க்கத்தில் கொலையா?
முட்டாள் மனிதா?
 குறிப்பு:”மாணவர்கள்” என்பது தாலிபான் என்ற சொல்லின் பொருளாகும்.

-“கவியன்பன்” கலாம்.Advertisement

Close