அதிரையர்களுக்கு அவசர எச்சரிக்கை! தொக்காளிக்காடு டேமுக்கு யாரும் குளிக்க செல்ல வேண்டாம்!

wpid-img-20151012-wa0009

திரை அருகே சில கி.மீ தொலைவில் உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் உள்ளது மகாராஜ சமுத்திர அணை. இங்கு பல பகுதிகளில் இருந்து ஒன்றினையும் ஆறுகள் இந்த அணைக்கு வந்து ராஜாமடம் கிளை வாய்க்கால் வழியாக கடலுக்கு செல்கின்றன.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இதன் சுற்றுவட்டாரங்களில் நல்ல மழை பெய்து வருவதால் இந்த அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து அதிரை இளைஞர்கள், சிறுவர்கள் இந்த அணைக்கு சென்று உற்சாகமாக நீந்தி மகிழ்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

ஆனால், சமீப நாட்களால் மழை பொழிவு அதிகரித்துள்ளமையால் இந்த அணைக்கு வரும் தண்ணீரின் அளவு இரு மடங்கு அதிகமாக உள்ளது. இதனை யாரும் தாக்குபிடிக்க முடியாதவாறு உள்ளது. நேற்றைய தினம் இதில் குளிக்க சென்ற ஒரு இளைஞர் இதன் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடி கத்தியவுடன் வேறு சில அதிரை இளைஞர்கள் அந்த இளைஞரை மீட்டு காப்பாற்றியதாகவும் ஒரு தகவல் வருகிறது.

இது உறுதிபடுத்தப்பட்ட தகவல் இல்லையென்றாலும் வருமுன் காப்பதே சிறந்தது. எனவே இளைஞர்கள், சிறுவர்கள் இதன் வெள்ளம் குறையும் வரை இந்த அணையில் குளிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும், வீட்டில் உள்ள சிறுவர்களை பெற்றோர்கள் இதில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Close