அதிரை உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

தமிழகம் மற்றும் பதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. சென்னையிலிருந்து 300 கிலோமீட்டருக்கு தொலைவில், இலங்கைக்கு அருகே நிலைகொண்டுள்ள இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணிநேரத்திற்குள், தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 25 செ.மீ. அளவிற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று மண்டல ஆய்வு வானிலை மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close