நகைச்சுவை உணர்வு (SENSE OF HUMOUR)

smile

ஒரு மனிதனை துயரமான தருவாயிலிருந்து விடுப்பட செய்வது நகைச்சுவையே ! ஆம் இந்த நகைச்சுவை உணர்வு எனபது ஆறு அறிவு படைத்த நம் மனித சமுதாயத்திற்கு மட்டுமே சொந்தம். ஒவ்வவொரு மனிதனும் இயந்திரத்தை போல கால சக்கரத்தோடு சுழன்று கொண்டிருக்கிறான். நம் மகிழ்ச்சிக்கு நாமே காரணம்.

நகைச்சுவை என்பது சினிமாவில்தான் கிடைக்கவேண்டும் என்பதில்லை. நம் நண்பர்கள் மற்றும் குடும்ப வட்டாரத்தில் கண்கூடாக பார்க்கலாம். இல்லறம் நல்லறமாக மாறுவதில் இந்த நகைச்சுவையின் பங்காற்றல் மிகையே. ஆண்களுக்கு , அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களில் நடக்கும் ஏதுனும் நகைச்சுவையான சம்பவங்களை மனைவியிடத்தில் பகிரலாம். இப்படி செய்வதால் வீட்டில ஒரு கலகலப்பான சூழல் ஏற்பட வாய்ப்பாகும் . வீட்டிற்கு வரும்போதே , பயங்கர கோபமாக வருவது , கேட்டால், “இன்றைக்கு சரியான பதற்றம் (டென்ஷன்)” என்று கூறுவார்கள். அது சரி , உங்களது வேலை அலுவலகதில்தானே , வீட்டில் இல்லையே? பிறகு எதற்கு அதை வீட்டிற்க்கு கொண்டு வருகிரிகள் ?

ஆங்கிலத்தில் சொல்வார்கள் ,

smile is a curve that makes many
things straight .

முன்னே சொன்னதுபோல் நம் மகிழ்ச்சி நம் கையில். நம் வரவை எதிர்பார்த்து கொண்டிருக்கும் மனைவி மற்றும் குழந்தைக்கு நீங்கள் தினமும் கொடுக்கும் பரிசு உங்கள் புன்னகையே ! நம் குழந்தைகள் எவ்வளவு எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள் , தந்தை வந்தால் பள்ளியில் நடந்ததை கூறலாம் என்று, நீங்கள் குழந்தையோடு முகம் கொடுத்து பேசினால் மட்டுமே அன்றி அவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இது கணவருக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் மிக பெரிய பங்குண்டு. கணவனை மலர்ந்த முகத்தோடு வரவேற்பது, ஏதனும் ஒரு நல்ல செய்தியை சொல்வது என்று மகிழ்ச்சியான  சூழலை ஏற்படுத்தலாம்.

நம் கண்மணி நாயகம் (ஸல்) நகைச்சுவை எவ்வாறு அமைய வேண்டும் என்று கூறியதில் சில ,

உங்கள் நகைச்சுவைகளை கொண்டு யாரையும் அவமானப்படுத்தாதிர்கள் .

உங்கள் நகைச்சுவையோடு பொய்யை கலக்காதிர்கள்.

உங்கள் நகைச்சுவையை கொண்டு பிறரை பயமுறுத்தாதிர்கள்.

Close