பரங்கிப்பேட்டை முஸ்லிம்களின் மெய்சிலிர்க்க வைக்கும் மதநல்லிணக்கம்!

parangipettai

சுனாமியின் போது இந்தியாவே பரங்கிப்பேட்டை மக்களின் சேவைகளை கண்டு வியந்த தருணம் அது. இதுபோன்ற பல தருணங்களில் நேற்றைய தினமும் ஒன்று.

முதல் புயல் அடித்த மறுநாள் காலையே ஊர் முழுதும் பலரின் உழைப்பால் வைக்கப்பட்ட மரக்கன்றுகளை ஒரு நாள் முழுக்க சரி செய்தனர் அடுத்து நேற்று அரசாங்கத்தின் துணை இல்லாமல், ஊரில் உள்ள தன்னார்வலர்களும் , இளைஞர்களும் இணைந்து பணம் வசூலித்து மழையால் பதிக்கப்பட்ட மக்களுக்காக மழையில் உணவு தயாரித்து கிட்டத்தட்ட 1500 பொட்டலங்களை வீடுவீடாக சென்று விநியோகம் செய்தனர். இவர்கள் யாரும் தேர்தலில் நின்று பதவியடைய போவதில்லை, மனிதநேயத்தோடுஇறைவனின் பொறுத்ததிற்காக மட்டுமே உழைத்த எமதூர் மக்களை எண்ணி பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. மதவேறுபாடு பாராமல் அனைவருக்கும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

-பொடியன் (முகனூல் பக்கம்)

நாட்டில் மதத்துவேச கருத்துக்களை பகிர்ந்து மக்கள் மத்தியில் குழப்பத்தையும், மதவெறியையும் ஏற்படுத்தி வரும் சிலர் மத்தியில் மத நல்லினக்கத்துடன் அனைவருக்கும் உணவு வழங்கி உதவிய இந்த மக்களை அதிரை பிறை சார்பாக பாராட்டுகிறோம்.

Close