அதிரையில் ஒரு வாரத்துக்கு பிறகு சுட்டெரிக்கும் சூரியன்!

Sunny sky background

அதிரையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. தொடர் மழையின் காரணமாக மக்களுக்கு எது பகல் எது இரவு என்று தெரியாத அளவுக்கு குளிர்ச்சியும் வெளிச்சமின்மையும் அதிரையில் காணப்பட்டது. வெயில் ஒரு வாரமாக இல்லாமல் மக்கள் வெயிலை இன்றைக்காவது பார்க்க முடியாதா என்று ஏங்கினர். காரணம் துவைத்த துணிகள் காய இடமின்றியும் வீட்டுள் மின் விசிரியில் காய வைக்கும் சூழலும் நிலவியது.

அதுமட்டுமின்றி சாலைகளில் தேங்கிக்கிடக்கும் தண்ணீர் வற்றுவதற்கும் பழைய வீடுகளில் கசியும் தண்ணீர் காய்வதற்கும் வெயில் தேவைப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மழை மேகங்கள் நமதூரை விட்டு மறைந்து வெயில் தலைகாட்ட துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Close