தென் ஆப்பிரிக்கவில் இந்திய வம்சாவளியான முஸ்லிம் கிரிக்கெட் வீரர் படுகொலை!

proudly-southafricaஇந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தலையை வெட்டி நரபலி கொடுக்கப்பட்டார்.

இந்த பயங்கர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நவாஸ் கான் (வயது 23).  தென் ஆப்பிரிக்காவின் கடலோர நகரமான  உம்சிண்டோவில் வாழ்ந்து வருகிறார்.  2013 ஆம் ஆண்டின் குறைபாடு உள்ளவர்களுக்கான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் விருதை பெற்று உள்ளார்.

இவரது நண்பர் தாண்டுவாக்கே துமா (வயது 21).  அதே பகுதியை சேர்ந்த மந்திரவாதி ஆகியோர் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள காட்டு பகுதியில் கத்தியால் கானின் தலையை வெட்டி நரபலி கொடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர்.  தனது பிரச்சினைகள் தீர மனிதன் ஒருவரை நரபலி கொடுக்க மந்திரவாதி கேட்டு கொண்டதற்கு இணங்க நண்பனை பலி கொடுத்ததாக கானின் நண்பர் துமா குற்றத்தை ஒப்பு கொண்டு உள்ளார். இதை தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் கானின் மொபைல் போனை வைத்து இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Close